search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் கைது"

    • ஜாபர் அலி திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்டை மேட்டை சேர்ந்தவர் பாட்ஷா மகன் ஜாபர் அலி (வயது 19). இவர் திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9-ந்தேதி அந்த சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசாரிடம் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

    அப்போது திண்டிவனம் பகுதியில் சிறுமியுடன் சென்ற ஜாபர் அலியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் மே ற்கொண்ட விசாரணையில் சிறுமியை ஜாபர் அலி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
    • அவரை கைது செய்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் வினோத்குமார்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசைவார்த்தை பேசி வந்துள்ளார். மேலும் தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

    இதையடுத்து இந்த விசயம் பெற்றோருக்கு தெரிய வரவே வினோத்குமார் மீது தேனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வினோத்குமாரை கைது செய்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காப்லின்ஸ் பேருந்து நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது

    ஊட்டி,

    கோத்தகிரி பாண்டியன்பார்க் காப்லின்ஸ் பேருந்து நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது காப்லின்ஸ் பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருந்த தேயிலை தோட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். பின்பு போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அந்த இளைஞர் ஒரசோலை காமராஜர் பகுதியை சேர்ந்த சுஜித் வயது 23 என்பதும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது உடனடியாக போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது பொது மக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர்.
    • சிறுவனின் தாய் கொடுத்த புகாரை அடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.

    கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிசிடிவியில் பதிவான இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அந்த வீடியோவில் அங்கிருந்த பொது மக்கள் சிலர் சிறுவனை தாக்கியது தொடர்பாக கேட்டதற்கு தன் செயலை நியாயப்படுத்தி பேசிய கார் உரிமையாளர், காரை வேகமாக எடுத்து சென்றுள்ளார்.

    சம்பந்தப்பட்ட சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளரின் மகன். படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது பொது மக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    வீடியோ வைரலானதை அடுத்து சம்பவத்த உறுதி செய்த போலீசார் சம்பந்தப்பட்ட கார் எண்ணைக் கொண்டு பொண்ணியம்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஷின்ஷாத் (20) என்கிற கார் உரிமையாளரை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

    சிறுவனின் தாய் கொடுத்த புகாரை அடுத்து முகமது மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கார் உரிமையாளரின் செயலை கண்டு மாநில கல்வித் துறை, சுகாதாரத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர்.
    • கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி தாலுகா நத்தம் அண்ணா வீதி சேர்ந்தவர் கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    ×